Monday, March 19, 2018

மைக்ரோ கதை:பட்டன்


யுகச்சோர்வு முகத்தில் தெறிக்க,இரைந்து கிடந்த சாமான்களை வெறித்தாள் உமா.


"வெளியில தான் பெரிய பேரு!!! வீட்டுல ஒரு துரும்பை அசைக்கிறாரா!
எல்லாம் என் தலையில தான் வந்து விடியுது" என்று பிட்டர் ஹாஃபை
சபித்தபடி,சுத்தம் செய்யத் தொடங்கினாள்.

ஹாலில் மாட்டியிருந்த,"நாங்க மாடல் ஃபேமிலி" புகைப்படம்
அவளைப் பார்த்து கேலியாய்ச் சிரித்தது

லேசாய் திரும்பினாள்
பாதி திறந்திருந்த பாத்ரூம் கதவினூடே தெரிந்த டாய்லட் சீட் அவளை மேலும் வெறியேற்றியது.


"அவர் தான் அப்படின்னா,புள்ளைங்களாவது எனைப் புரிஞ்சு நடந்துக்குதுங்களா!!!
பெரிசாச்சும் கொஞ்சம் காது குடுத்து கேக்கும்!சிறுசு அப்படியே அப்பா மாதிரி.வார்த்தை பொறுக்காது!!!
கோவிச்சிகிட்டு கிளம்பிரும்."

என்று பல்லைக் கடித்தபடி,டாய்லட் சீட்டை மடாரென்று கீழிறக்கி
ஃப்ளஷ் பட்டனை வேக‌மாய் அழுத்தினாள்.


சென்னை மாநகரம் சுனாமியில் அழிந்தது.





No comments:

Post a Comment